கொரோனா தடுப்பு மருந்து 2022-இல் தான் வரும் அதுவரை... Current Affairs
@abinaya
VPoints 700
Supporters 22
Vent 115

நாம் எல்லோருக்குமே இப்போது இருக்கும் ஒரே கேள்வி கொரோனா தடுப்பு மருந்து எப்போது வரும் என்பது தான் ஆனால் உண்மையில் கொரோனா தடுப்பு மருந்து வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதை நான் சொல்லவில்லை உலக சுகாதார மையம் தான் கூறி இருக்கிறது. தற்போதைய நிலையில் ரஷ்யா மட்டுமே தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளது ஆனால் அது சரியான வழிகாட்டுதல்களை பின்பற்றி கண்டுபிடிக்க பட்டது இல்லை. தற்போதைய நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் தடுப்பு ஊசி கண்டுபிடிக்க பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அது உலகத்தில் உள்ள எல்லோரையும் சென்று சேர 2022 ஆகும் என்பதே உண்மை. ஏனென்றால் நாம் அனைவருமே தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும் அப்போது தான் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும். அமெரிக்கா 2021 கடைசியில் நாங்கள் 70 சதவிகிதமான மக்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்து விடுவோம் மீதமுள்ள மக்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்க தேவையில்லை ஏனென்றால் 70 சதவிகிதம் தடுப்பு மருந்து கொடுத்தாலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்கிறார்கள் ‌இந்தியாவை விட அங்கு மக்கள் தொகை குறைவு ஆனால் அப்படி இருந்தும் அவர்கள் கணக்குப்படி அடுத்த ஆண்டு எழுபது சதவீதம் மக்களுக்கு தான் தடுப்பு மருந்து கொடுக்க இயலும் என்கிறார்கள். அப்போது இந்தியாவின் நிலை என்ன என்று யோசித்து பாருங்கள்.இந்தியாவால் ஒரு மில்லியன் தடுப்பு ஊசிகளை தயாரிக்க இயலும் ஆனால் நம்முடைய மக்கள் தொகைக்கு அது நிச்சயம் போதுமானதாக இருக்காது . நாம் இப்போது சொல்லும் விஷயங்கள் எல்லாம் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம் . ஏதேனும் ஒரு இடத்தில் தவறு நடந்தால் கூட தடுப்பு மருந்து வர தாமதம் ஆகும் அப்படி ஆனால் கொரோனா முடியவும் தாமதம் ஆகும். இன்னும் சில ஆண்டுகளுக்கு நாம் முகக் கவசம் அணிந்து கொண்டு தான் இருக்க வேண்டும் இதுதான் தற்போதைய நிலை.

-30 Characters

What's your mood

Auto detect mood

Talk Freely

Mood Board
Language