உலகத்தைப் படைத்த இறைவன் அதில் இத்தனை பிரிவினைகள் உருவாக்கப் படும் என்பதை அறியாமலே இருந்துவிட்டார் போல Current Affairs
@shve ram
VPoints 978
Supporters 18
Vent 272

உலகத்தைப் படைத்த இறைவன் அதில் இத்தனை பிரிவினைகள் உருவாக்கப் படும் என்பதை அறியாமலே இருந்துவிட்டார் போல, அதனால் தான் ரசிக்கத் தந்த கண்களை அனைவரும் இன்று பார்த்தவுடன் எடை போடுவதற்குப் பயன்படுத்தி வருகிறார்கள்! நம்முடன் சக மனிதனாய் பிறந்தவர்களைத் தொடக் கூடாது, வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது, சரிக்குச் சமமாக நின்று பேச கூடாது என்றெல்லாம் சட்டம் வகுக்கும் சிலர் அதே நிலை அவர்களுக்கு நேர்ந்தால் அந்த வலி எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்க தவறுகிறார்கள்.. கருப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன் என்றெல்லாம் பார்த்தே பழகிய நம் சமூகத்தினருக்கு இதயம், மனிதம், அன்பு, பாசம் என்று எடுத்துக்கொள்ள முடிவதில்லை.. பல காலங்களைத் தொடர்ந்து வரும் இந்தத் தீண்டாமை கொடுமைகள் இன்றும் சில இடங்களில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம் கண்களுக்குத் தெரியாதவகையில் இது போன்ற செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது, தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்ற எண்ணத்தை அவர்களின் மண்டைக்குள் விதைத்தவர் யார் என்று தெரியவில்லை.. ஆள் பார்ப்பதற்குக் கொஞ்சம் அலங்கோலமாக இருந்தால் அவர்கள் தீண்ட தகாதவர்கள் என்று ஒரு போலி மாயையை நம்மிடையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள், இவையெல்லாம் மாறி விடுமா என்றால் நிச்சயம் எடுத்தவுடன் மாறாது.. இதற்குப் பின்பும் சில அரசியல் முடிச்சுகள் இருக்கிறது, இதிலிருந்து ஆதாயம் அடைவோர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் அதையெல்லாம் தாண்டி இப்படிபட்ட பிரிவினையை உடைக்க அவர்கள் ஒரு போதும் அனுமதிப்பதில்லை! யார் எந்த மயிராக இருந்தாலும் சரி இந்தக் காலத்து இளைஞர்கள் திருத்த நினைத்தால் போதும் நாளை விடியும் பொழுதில் அனைத்தையும் மாற்றிக் காட்ட முடியும், ஆனால் அவர்களை நினைக்க விட மாட்டார்கள் அவர்களும் சுயமாக நினைக்க மாட்டார்கள் ஏனென்றால் சுற்றத்தின் அமைப்பு அப்படி.. நாளை உன்னையே ஒருவன் தொடுவதற்கு நெருடலாக நினைக்கும் போது அந்த வலியை உணரும் போது நீயும் தெருவுக்கு வந்து குரல் கொடுப்பாய், அதுவரை இந்தப் பதிவு வெறும் லைக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாய் மட்டுமே இருக்கும்! நன்றி!

-30 Characters

What's your mood

Auto detect mood

Talk Freely

Mood Board
Language