ஆன்லைன் தேர்வில் உள்ள சிக்கல் மற்றும் மாணவர்களின் மனக்குறை Current Affairs
@abinaya
VPoints 1469
Supporters 34
Vent 265

இன்று பல கல்லூரிகள் ஆன்லைன் தேர்வு நடத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. நாம் அனைவருமே நல்ல நெட்வொர்க் கிடைக்கும் இடங்களில் இருக்கிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கையில் கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத தொடங்கா விட்டால் அதன் பின்னர் அவர்களுக்கு மீண்டும் அந்த தேர்வு எழுத அனுமதி இல்லை என்று கூறுகின்றன. இது அடிப்படையில் சரியான விஷயம் இல்லை.எல்லோருமே ஒரே விதமான சூழ்நிலையில் வாழவில்லை இதனை கல்லூரிகள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். என் நண்பன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். அவன் வாழும் மலைப் பகுதிகளில் நெட்வொர்க் கிடைப்பது மிகக் கடினம். அவன் தினமும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து தான் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பான். இப்படி ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான சூழலில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்தாக வேண்டும். இப்படி இருக்கையில் கல்லூரிகள் ஆன்லைன் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு தபால் மூலம் தேர்வு எழுத அனுமதி தர வேண்டும். இறுதிப் பருவத் தேர்வுகள் மட்டுமே தபால் முறையில் நடைபெற அனுமதி உள்ளது. ஆனால் அவ்வப்போது நடைபெறும் சிறு தேர்வுகள் மாணவர்களின் இன்டர்நெல் மதிப்பெண்களுக்கு மிக அவசியம். அவற்றையும் தபால் முறையில் எழுத கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும்.இது போன்ற இக்கட்டான நிலையில் கல்லூரிகள் மாணவர்களுக்கு உதவ வேண்டும் ஆனால் கல்லூரிகள் இது போன்ற பிரச்சனைகளுக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. இது போன்ற பிரச்சினைகளை கல்லூரிகள் ஒதுக்கி விடுகின்றன என்பதே உண்மை. பெரும்பாலும் கல்லூரிகள் எங்களால் இந்த பிரச்சினைகளை சரி செய்ய இயலாது என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு மாணவரால் எவ்வாறு இதனை சரி செய்ய இயலும்.கட்டணம் வசூலிக்க ஆர்வம் காட்டும் கல்லூரிகள் மாணவர்களின் நலனிலும் ஆர்வம் காட்ட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாம் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்விக் கற்றோமோ இல்லையோ மன அழுத்தத்தை குறைவில்லாமல் பெற்று இருக்கிறோம்.

-30 Characters

What's your mood

Auto detect mood

Talk Freely

Mood Board
Language