கூகுள் நமக்கு கற்றுத் தருகிறதா இல்லை முட்டாள் ஆக்குகிறதா Daily Drag
@abinaya
VPoints 1469
Supporters 34
Vent 265

நாம் அனைவரும் இன்று எல்லாவற்றையும் கூகுளில் தான் தேடுகிறோம். எந்த ஒரு சிறிய விஷயத்தையும் கூகுளில் தான் தேடுகிறோம் நாம். கூகுள் நமக்கு நிறைய சொல்லித் தருகிறது உண்மை தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவில் நம்முடைய தேடுதல் நின்று விடுகிறது கூகுளால். சற்று சிந்தியுங்கள் முன்னர் எல்லாம் ஏதாவது ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் நாம் நிறைய ஆராய்ச்சி செய்வோம். நிறைய புத்தகங்களை படிப்போம் பல மனிதர்களிடம் அது பற்றி தகவல் சேகரிப்போம் ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. இன்னும் உங்களுக்கு புரியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் கட்டுரை எழுத சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பு மூக்குத்தி. இதை ஒரு மாணவர் கூகுளில் தேடுகிறார். அவருக்கு மூக்குத்தி என்பது பெண்கள் மூக்கில் அணியும் ஆபரணம் என்று பதில் வருகிறது. மற்றொரு மாணவர் தனது பாட்டியிடம் இது பற்றி கேட்கிறார் அப்போது அந்த பாட்டி ஆண்களின் மூச்சு காற்றை விட பெண்களின் மூச்சு காற்றுக்கு ஆற்றல் அதிகம் அதைக் கட்டுப்படுத்தவே பெண்கள் மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார். நீங்களே சிந்தித்து பாருங்கள் இரண்டு மாணவர்களில் யாருடைய பதில் தனித்துவமாக இருக்கிறது என்று.நாம் அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் கூகுளை தாண்டி நிறைய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் தனித்துவமாக இருப்போம் இல்லை என்றால் கூட்டத்தில் ஒருவராக தான் இருப்போம்.எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.கற்றது கல் அளவு கல்லாதது உலகளவு என்பார்கள். இதுதான் நிஜம். இதை நாம் நம் மனதில் ஆழமாக பதிய வைத்து கொள்ள வேண்டும்.இன்றைய காலத்தில் தனித்துவத்தோடு இருந்தால் தான் மதிப்பு பத்தோடு பதினொன்றாக இருந்தால் இந்த உலகம் நம்மை ஒதுக்கி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். புதிய பல விஷயங்கள் கற்போம் அறிவு பெறுவோம்.

-30 Characters

What's your mood

Auto detect mood

Talk Freely

Mood Board
Language