ஊரடங்கு தான் கொரோனா அதிகரிக்க காரணம் Politics
@abinaya
VPoints 1019
Supporters 27
Vent 170

உங்கள் அனைவருக்கும் இந்தியா தான் அதிக நாட்கள் ஊரடங்கு நீட்டித்த நாடு என்பது தெரியும். ஆனால் இந்தியா ஒரு நாளைக்கு 90000 கொரோனா கேஸ்களை பதிவு செய்கிறது. நம் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்றவை ஊரடங்கை பின்பற்றவே இல்லை. அந்த நாடுகளில் எல்லாம் தற்போது கொரோனா கட்டுப்படுத்த பட்டுவிட்டது.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் கடந்த செப்டம்பர் 14 அன்று மொத்தமே வெறும் 500 புதிய கேஸ்களை தான் பதிவு செய்து உள்ளது. நம் நாடு கடைப்பிடித்த ஊரடங்கால் தான் கொரோனா அதிகமாக பரவி இருக்கிறது. எப்படி என்று நீங்கள் நினைக்கலாம். ஊரடங்கு போடப் பட்டது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆனால் ஊரடங்கு சமயத்தில் தான் இந்தியாவில் நாம் அனைவரும் வேலை செய்யும் இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினோம் ஏனென்றால் வேலை செய்யும் இடத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை. இப்படி மக்கள் குடிபெயர்ந்த போது கொரோனாவும் கிராமங்களுக்கு குடிபெயர்ந்தது என்பதே உண்மை.இதனை நாம் எப்படி சரி செய்ய போகிறோம் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் யாரும் சமூக விலகலை பின்பற்றுவது இல்லை. எல்லோருக்கும் ஒரு அலட்சியம் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது அலட்சியமாக இருந்து விட்டு பின்னர் வருத்தப் படக் கூடாது.நம் ஊரில் எந்த அளவிற்கு பிரச்சினை மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் நாம் அலட்சியமாக இருப்பது நமது தவறு. தயவு செய்து சமூக விலகலை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.அடிக்கடி உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியே சென்று வந்த பின் நன்றாக குளித்து விட்டு பின்னர் வீட்டிற்கு உள்ளே செல்லுங்கள். கொரோனா விளையாட்டு அல்ல நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம் ஆனால் உங்கள் மூலம் அது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு, வயதானவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது . எனவே பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இந்தியா கொரோனாவை நிச்சயமாக வெல்லும் ஆனால் அது நம் கைகளில் தான் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

-30 Characters

What's your mood

Auto detect mood

Talk Freely

Mood Board
Language